எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போனில் அழைப்பு விடுத்த மல்லிகார்ஜுன் கார்கே.?
பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக வியூகம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அரசியல் வட்டராங்ளின் பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகம் மற்றும் தேசிய அளவிலும் காங்கிரஸின் முக்கிய கூட்டணிக் கட்சியாக இருக்கும் திமுக, எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தும் காங்கிரஸின் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகள் போன்ற எதிர்க்கட்சிகளின் பதிலுக்காக காங்கிரஸ் காத்திருப்பதால், இந்த கூட்டத்திற்கான தேதி மற்றும் இடம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 2024 நாடளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த ஒற்றுமையை உருவாக்கி, எதிர்க்கட்சிகளின் பரந்த கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.