ஆளுநர் தன் வேலையை தவிர வேறு எல்லா வேலையையும் பார்க்கிறார்…இயக்குநர் பா.ரஞ்சித் காட்டம்.!

Default Image

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த அளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், குடிமைப்பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று  கலந்துரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் “ஸ்டெர்லைட் போராட்டம் மக்களை தூண்டிவிட்டு நடத்தப்பட்டது எனவும், நாட்டின் தேவையை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டி விட்டு மூடிவிட்டனர்” எனவும் கூறினார்.

ஆளுநரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து, இயக்குனர் பா.ரஞ்சித்தும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்கள் அவரிடம் “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்ச்சை பேச்சு குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த பா.ரஞ்சித் ” ஆளுநர் ஆர்.என்.ரவி, தன்னுடைய வேலையை தவிர வேறு எல்லா வேலையையும் பார்த்து வருகிறார். அவரது போக்கு மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்து ஏதாவது பேசி பொது சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். கவர்னரின் பேச்சு தவறுதான், அதை ஏற்க முடியாது” என காட்டத்துடன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்