ராகுல் காந்தி தகுதி நீக்கம்..! வயநாடு காங்கிரஸ் அலுவலகத்தில் இன்டர்நெட் இணைப்புகள் ரத்து..!
வயநாடு காங்கிரஸ் அலுவலகத்தில் டெலிபோன் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது அவரது தொகுதியான வயநாட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் டெலிபோன், இன்டர்நெட் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து மக்களவை செயலகம் அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அறிவித்திருந்தது. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள அவரது அரசு வீட்டை காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, ராகுல் காந்தி நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற விசாரணையில் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தொடர்பாக குஜராத் அரசு மற்றும் மனுதாரர் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க சூரத் மாவட்ட நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதன்பின், ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.