அதிகரிக்கும் பதட்டம்…! லெபனான் – இஸ்ரேல் மாறி மாறி ராக்கெட் தாக்குதல்…
லெபனானில் இருந்து ஏவப்பட்ட எல்லை தாண்டிய ராக்கெட்டுகளுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல், கடந்த வியாழன் அன்று காசா பகுதியில் ஹமாஸ் மீதும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
கடந்த புதன்கிழமையன்று ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதியில் நடந்த மோதலுக்குப் பிறகு, ராக்கெட் ஏவுதல்களைத் தொடர்ந்து காசாவைத் தாக்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இன்று விடியற்காலையில் இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி லெபனானைத் தாக்கின.
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் pic.twitter.com/JDtd414nbz
— E Chidambaram. (@JaiRam92739628) April 6, 2023
தற்போது, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும், இடையே யூதர்களின் பாஸ்கா மற்றும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் ஆகிய இரண்டிஇருக்கும் நடுவே பதட்டங்களை அதிகரித்துள்ளன.
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தொடர் ராக்கெட் தாக்குதல் pic.twitter.com/Kmx5suJjPq
— E Chidambaram. (@JaiRam92739628) April 6, 2023
அங்கு இஸ்ரேலிய பொலிசார் தொழுகையின் போது, மசூதி வளாகத்திற்குள் நுழைந்து வழிபாட்டாளர்களையும் பாலஸ்தீனியர்களையும் கூட தாக்கினர். இதனால், அப்பகுதியில் தீவிர மோதல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. லெபனானில் இருந்து 34 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலியப் படைகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் கேஸ் ஸ்டேஷன் மீது லெபனானிலிருந்து ராக்கெட் வீச்சு pic.twitter.com/xtrDqOhQFL
— E Chidambaram. (@JaiRam92739628) April 6, 2023
லெபனானின் ராக்கெட் தாக்குதல் 2006-க்குப் பிறகு இஸ்ரேலியப் படைகள் ஹெஸ்பொல்லா படைகளுடன் மோதலில் இருந்து மிகப்பெரிய ஒன்றாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.