மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிக்கிறேன் – திமுக எம்.பி.கனிமொழி ட்வீட்

Default Image

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான போராட்டம் குறித்த ஆளுநர் பேச்சுக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம்.

குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடனான கலந்துரையாடலில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர்.  வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் பலவும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன என கூறி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அது சட்டமாக முடியாது. வார்த்தை அலங்காரத்துக்காக நிறுத்தி வைப்பு என்கிறோம், கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம். அரசியலமைப்பின்படி அரசியல் அமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை எனவும் அரசு இயற்றிய நிலுவையில் மசோதாக்கள் குறித்து தெரிவித்தார்.

ஆளுநரின் பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன், வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மக்கள் போராட்டம் குறித்த ஆளுநர் பேச்சுக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஆளுநரைக் கண்டிக்கிறேன் என்றும் ஆதாரங்களைத் தரவேண்டும் ஆளுநர் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்