பாஜகவில் இணையும் எனது மகனின் முடிவு என்னை காயப்படுத்தியுள்ளது..! ஏ.கே.ஆண்டனி வருத்தம்.!
பாஜகவில் இணையும் எனது மகனின் முடிவு தன்னை காயப்படுத்தியுள்ளது என ஏ.கே.ஆண்டனி கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் முரளீதரன் ஆகியோர் முன்னிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். முன்னதாக அனில் ஆண்டனி, பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை விமர்சித்து ட்வீட் செய்ததற்காக காங்கிரஸில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவில் இணைந்த பின் அனில் ஆண்டனி கூறும்போது, நாட்டுக்காக உழைப்பதே எனது தர்மம் என்று கூறினார். இன்று, பல காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஒரு குடும்பத்திற்காக வேலை செய்வதே தங்கள் தர்மம் என்று நம்புகிறார்கள் என அவர் மேலும் கூறினார்.
அனில் ஆண்டனி பாஜகவில் இணைந்ததையடுத்து, அவரது தந்தை மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி, பாஜகவில் இணையும் அனிலின் முடிவு தன்னை காயப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இது மிகவும் தவறான முடிவு. ஒற்றுமையும் மத நல்லிணக்கமும்தான் இந்தியாவின் அடிப்படை என்றும் அவர் கூறினார்.
#WATCH | “Anil’s decision to join BJP has hurt me. It is a very wrong decision. India’s base is unity and religious harmony. After 2014, Modi govt came to power, they’re systematically diluting diversity and secularism….”: AK Antony on his son Anil Antony joining BJP pic.twitter.com/6Gg03qvZY0
— ANI (@ANI) April 6, 2023