இதுவரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.! தோனியின் சிக்ஸ் பற்றி மார்க் வுட் புகழாரம்…

Default Image

எம்.எஸ்.தோனிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு மற்றும் ஆரவாரம் பற்றி லக்னோ அணி பவுலர் மார்க் வுட் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், கடந்த 3ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் 20 வது ஓவரில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கியதும், ஸ்டேடியம் முழுவதும் அவருக்கு ஆரவாரம் செய்தனர். தோனி கடைசி ஓவரில், தான் விளையாடிய முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர்களை அடித்து மாஸ் காட்டினார். ஆனால்,  3-வது பந்தில் சிக்ஸ் அடிக்க முயற்சித்து அவுட் ஆனார்.

இந்நிலையில், கடைசி ஓவரை வீசிய, மார்க் வுட், தோனியின் ஆட்டத்தையும் அவரது ரசிகர்கள் உறச்சாகத்தை கண்டு வியந்தார். போட்டி முடிந்த பின் பேசிய மார்க் வுட், தோனி பேட்டிங் செய்ய வரும் போதும், 2 சிக்ஸர்களை அடித்த போதும் எழுந்த ஆரவாரம் தான், நான் இதுவரை மைதானத்தில் கேட்டதிலேயே அதிகப்படியான ஆரவாரம் என்று புகழாரம் சூட்டினார்.

முன்னதாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லக்னோ அணிக்IPL2023கு எதிரான போட்டியில், லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்