‘நல்லவேள நான் பொண்ணா இல்ல’ இல்லாட்டி.! வெற்றிமாறனை புகழ்ந்த விஜய் சேதுபதி….
‘விடுதலை’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் வெற்றிமாறனை புகழ்ந்த நடிகர் விஜய் சேதுபதி.
நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
படம் வெளியாகி 5 நாட்களை கடந்தும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும். மேலும், செப்டம்பர் மாதம் விடுதலை திரைப்படத்தின் 2-வது பாகம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று படக்குழு இப்படத்தின் வெற்றி விழாவை நடத்தினர். அப்போது, இந்த படத்தில் நடித்த நடிகர்கள் முதல் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி, எனக்கு வெற்றிமாறனை பார்க்கும்போது ரொம்ப பிரமாண்டமா இருந்தது, நல்லவேள நான் பொண்ணா இல்ல, இல்லாட்டி அவர உஷார் பண்ணிட்டு இருப்பேன் என்று பெருமை கொண்டார்.
நான் நல்ல இயக்குநரான்னு எனக்கு தெரியாது சேது. ஆனா நான் நல்ல டெய்லர். தச்சு கொடுத்துடுவேன் கவலப்படாதீங்க என படப்பிடிப்பின்போது வெற்றிமாறன் பேசியதை, ‘விடுதலை’ படத்தின் வெற்றி விழாவில் நினைவுகூர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவரை பாராட்டினார்.