வாக்காளர் அடையாள அட்டை- ஆதார் எண் இணைப்பு; அவகாசம் நீட்டிப்பு; அமைச்சர் கிரண் ரிஜிஜு.!
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் என்னுடன் இணைக்காதவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என கிரண் ரிஜிஜு உறுதி.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை, எனவும் இணைப்பிற்கு எந்த இலக்கும் அல்லது காலக்கெடுவும் வழங்கப்படவில்லை என்றும், ராஜ்யசபாவில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1, 2O22 முதல் தன்னார்வ அடிப்படையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்கனவே இருக்கும் மற்றும் வருங்கால வாக்காளர்களின் ஆதார் எண்ணை சேகரிக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியது, இதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான இலக்குகள் அல்லது காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை.
மேலும் ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்காதவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படாது என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். இதற்கான அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.