“தயிர் எங்களுக்கு உயிர்” சட்டபேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு.!
தயிர் எங்களுக்கு உயிர் என்று சட்டபேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொடர்ந்து துறை ரீதியிலான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கள் தென்னரசு, திருச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த ரூ.600 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்று நிறுவப்படும். என்றார்.
மேலும், இந்தி எதிர்ப்பு குறித்தும் தமிழ் பெருமையை பற்றியும் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தயிர் எங்களுக்கு உயிர்” என்று தஹி விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தயிர் பற்றிய தமிழ் பெருமையை எடுத்துரைத்தார்.
இதற்கிடையில், நேற்றய தினம் கூட சட்டப்பேரவையில் பேசிய “தயிருக்கு தஹி, தஹிக்கு இங்கு நஹி”, “அந்தி வந்தால் நிலவு வரும், இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும்” என கூறியறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.