பிரதமர் மோடி தமிழகம் வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னையில் பிரதமர் மோடி வருகையொட்டி நான்காயிரம் போலீசாருடன் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8-ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதையொட்டி, நேற்று பாதுகாப்புகளை மேம்படுத்துவது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த வகையில், சென்னையில் பிரதமர் மோடி வருகையொட்டி நான்காயிரம் போலீசாருடன் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வருகை ஒட்டி வரும் 9-ஆம் தேதி வரை தாம்பரத்தில் ப்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.