சாமி கும்பிட தாங்க வந்தோம்…கோபத்துடன் ரசிகர்களை எச்சரித்த நயன்தாரா.! வைரலாகும் வீடியோ.!
நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று பங்குனி உதிரத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் பழுத்துரில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலில் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது கோவிலில் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் கையில் கேமராவை வைத்து கொண்டு நயன்தாராவுடன் புகைப்படம் எடுக்க கேட்டனர்.
இதனால் கடுப்பான நயன்தாரா வேகமாக வந்து, “சாமி கும்பிட தாங்க வந்தோம் கொஞ்சம் இருங்க. 5 நிமிஷம் அமைதியா இருங்க ” என கூறிவிட்டு சென்றார். பிறகு விக்னேஷ் சிவனும் அங்கிருந்தவர்களிடம் இருங்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என கூறினார்.
பிறகு அங்கு இருந்த புறப்பட்ட நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி திருச்சி ரயில் நிலையத்திற்கு சென்று தேஜஸ் ரயிலில் ஏறினார். அப்போது ரசிகர்கள் சிலர் செல்போனில் நயன்தாராவை புகைப்படம் எடுத்தனர்.
குலதெய்வ கோயிலில் வழிபட்ட விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி ❤️..
FOR ANY ADVERTISEMENT ENQUIRY : [email protected]@VigneshShivN #Nayanthara #Vigneshshivan #WikkiNayan #sdcworld pic.twitter.com/6ND0WIPvOr
— SDC World (@sdcworldoffl) April 5, 2023
இதனால் மீண்டும் கடுப்பான நயன்தாரா ” என்னை புகைப்படம் எடுக்காதீங்க.. கேமராவை ஆப் செய்யுங்கள் ” என மிகவும் கோபத்துடன் எச்சரித்து சென்றார். அதற்கான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.