ஐந்து ஆண்டுகள் வரை மீன்கள் கெடாமல் இருக்கும் தொழில்நுட்பத்தை தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு திட்டம்!அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்,மீன்கள் ஐந்து ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் வகையில், ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தை தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கீழ் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இது தொடர்பாக ஜப்பான் நாட்டு அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ததாகவும் கூறினார்.
மீன்களை பிடித்ததும் “ஸ்லாரி ஐஸில் மைனஸ் 60 டிகிரி செல்ஷியசில் வைத்து பதப்படுத்தும் தொழில்நுட்பம் ஜப்பான் நாட்டில் பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு வைக்கும் பட்சத்தில் மீன்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகள் கெடாமல் இருக்கும். மீன்கள் குறைவாக உள்ள காலங்கள் மற்றும் மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இந்த தொழில்நுட்பம் பயன்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.