அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் இபிஎஸ்!
அதிமுக உறுப்பினர் சேர்க்கையை சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் துவக்கி வைத்தர் இபிஎஸ்.
பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, கடந்த்த் 28-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவில் உறுப்பினர்களை சேர்க்கும் படிவத்தை ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதும் உறுப்பினர் சேர்க்கைக்கான முதல் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இந்த நிலையில், அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை இன்று தொடங்கி வைத்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை வழங்கி தொடங்கி வைத்தார். ஒரு உறுப்பினர் விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு படிவத்தில் 25 உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளலாம். அதிமுகவில் உறுப்பினர்களாக சேர விரும்புவோர் ரூ.10 கட்டணமாக செலுத்த வேண்டும். அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.