BREAKING : இதுவரை இல்லாத அளவிற்கு தங்கம் விலை உச்சம்.! கடும் அதிர்ச்சியில் மக்கள்.!
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்வை கண்டு வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் முதன் முறையாக 45-ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையாகிறது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து 45,520-க்கு விற்பனை ஆகிறது. கிராமிற்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைப்போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 72.90 உயர்ந்து 780.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும். கடன் வட்டி விகிதங்கள் கால் சதவீதம் உயரக்கூடும் என வெளியானதன் எதிரொலி காரணமாக தங்கம் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.