வாவ் செம கேட்ச்…குஜராத் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்.! வைரலாகும் அசத்தல் வீடியோ.!!
நேற்று நடைபெற்ற 16-வது சீசன் ஐபிஎல் தொடரின் 7-வது கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதியது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச முடிவு செய்தது. அதன்படி டெல்லி அணி பேட்டிங் செய்தபோது 8வது ஓவரை ஜோசப் வீசினார்.
அப்போது , ஜோசப் வீசிய அந்த ஓவரின் 3-வது பந்து சற்று வேகமாக பவுன்சர் ஆனது. அந்த பந்தை எதிர்கொண்ட டெல்லி வீரர் ரிலீ ரோசோவ் வேகமாக அடுத்த போது குஜராத் வீரர் ராகுல் திவாட்டியா டைவ் போட்டு அசத்தலான கேட்சை பிடித்தார்.
Two in Two by Alzarri Joseph ????????
Watch them here ????????
Live – https://t.co/9Zy9HcuWS6 #TATAIPL #DCvGT #IPL2023 pic.twitter.com/ocfJEm9uuQ
— IndianPremierLeague (@IPL) April 4, 2023
இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் “வாவ் செம கேட்ச்” என ராகுல் திவாட்டியாவை பாராட்டி வருகிறார்கள். மேலும் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த சீசனில் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.