கோஸ்ட்டா ரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.! ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு.!
கோஸ்ட்டா ரிக்கா மற்றும் சான்ஜோஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள கோஸ்ட்டா ரிக்கா மற்றும் சான்ஜோஸில் அதிகாலை 4 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதுவரை பாதிப்பு குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை. மேலும் சமீபகாலமாக பல நாடிகளில் உள்ள பகுதியில் நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று ஏற்பட்ட கோஸ்ட்டா ரிக்காவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை போல பிலிப்பைன்சில் ரிக்டர் அளவு கோளில் 6.2 என்ற ரிக்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.