கவர்ச்சிகரமான அரசியலை திமுக செய்து வருகிறது.! இபிஎஸ் கடும் விமர்சனம்.!
கவர்ச்சிகரமான அரசியலை திமுக செய்து வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று கோவையில் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது ஆளும் திமுக அரசை விமர்சித்து பல்வேறு குற்றசாட்டுகளை அவர் முன்வைத்தார்.
புதிய திட்டம் இல்லை :
அவர் பேசுகையில், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு கடந்த 2 ஆண்டுகளில் எந்த புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று குற்றம் சாட்டினார். ஆனால் மாறாக மற்ற அனைத்தும் விலை ஏறிவிட்டதாக குறிப்பிட்டார்.
விலையேற்றம் :
வீட்டு வரி, சொத்துவரி, கடை வரி, குடிநீர் வரி, குப்பை வரி முதற்கொண்டு அனைத்தும் ஏற்றப்பட்டுள்ளது என்றார். மேலும், மின்கட்டணம் மக்கள் தாக்குபிடிக்கமுடியாதபடி உயர்ந்துள்ளது என அளும் கட்சியை குற்றம் சாட்டினார். திமுக கவர்ச்சிகரமான அரசியலை மேற்கொள்கிறது. மக்களை ஏமாற்றும் அரசியலை செய்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
மு.க.ஸ்டாலின் :
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திரைப்படத்தில் தோன்றுவது போல அவ்வப்போது தோன்றி பேசிவிட்டு சென்று விடுவார் எனவும் தனது குற்றசாட்டுகளை முன்வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.