ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி.!
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தற்போது சில வாரங்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்புடன், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அசோக் கெலாட் :
தற்போது காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட் தனது டிவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளார்.
கொரோனா உறுதி :
அதில், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இருப்பதாகவும், அதனால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி சில நாட்கள் வீட்டில் இருந்து தனது பணிகளை மேற்கொள்ள போவதாகவும், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் குறிப்பிட்டார்.
पिछले कुछ दिनों में देशभर में कोविड के मामले बढ़े हैं। मैं स्वयं भी हल्के लक्षणों के साथ कोविड से संक्रमित हो गया हूं। डॉक्टरों की सलाह के अनुसार अगले कुछ दिन निवास से ही कार्य जारी रखूंगा। आप सब सावधानी बरतें एवं कोविड प्रोटोकॉल का पालन करें।
— Ashok Gehlot (@ashokgehlot51) April 4, 2023