IPL 2023: குஜராத் மிரட்டல் பந்து வீச்சு; டெல்லி அணி 162 ரன்கள் குவிப்பு.!
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் DC-GT இடையேயான போட்டியில், முதலில் பேட் செய்த டெல்லி அணி 162/8 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் கேப்டன் வார்னர் மற்றும் ஷா ஆட்டத்தை தொடங்கினர். முதல் விக்கெட்டாக ஷா, 7 ரன்களில் ஷமியிடம் ஆட்டமிழந்தார். வார்னர் ஓரளவு நிலைத்து ஆட 37 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிச்சேல் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தடுமாறிய டெல்லி அணியில், ஷர்ப்ஃராஸ் கான்(30 ரன்கள்) மற்றும் இன்று அறிமுகமான போரல் (20 ரன்கள்) மற்றும் அக்சர் பட்டேல் (36 ரன்கள்) அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
முடிவில் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ஷமி மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கெட்களும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.