அதிகரிக்கும் கொரோனா – பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்..!
கொரோனா தொற்று சென்னையில் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தொற்று சென்னையில் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதிக்கப்படுபவர்களுக்கு பின்பற்றப்படும் அரசின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்ற சுகாதார அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சிஅறிவுறுத்தியுள்ளது.