கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணி – ஏப்.6ல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

Default Image

கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ள திட்டம்.

கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 8ம் கட்ட அகழாய்வில் 20 குழிகள் தோண்டப்பட்டு சுடுமண் பொம்மை உறை கிணறுகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளவுள்ளனர். கொந்தகை அகழாய்வு தளத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டன. மேலும்,  திருவண்ணாமலை கீழ்நமண்டியில் அகழாய்வு பணிகளையும் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்