நிலக்கரி எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது – அமைச்சர் உதயநிதி
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம், | உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி, அண்டமி, நெம்மேரி, கொடியாளம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழகஅரசு தரப்பில், விளக்கமளிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு விவசாயிகள் தரப்பிலும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு அனுமதிக்காது
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில் மத்திய அரசு நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதிக்காது. இது குறித்து நாளை சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.