பரபரப்பு..கிரிக்கெட் போட்டியில் நோ பால் கொடுத்த நடுவருக்கு கத்தி குத்து..!

Default Image

ஒடிசாவில் நோ பால் கொடுத்த நடுவரை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள மகிசலந்தா கிராமத்தில் சரியான பந்திற்கு நோ பால் கொடுத்ததால் போட்டியின் நடுவரைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். கட்டாக் மாவட்டத்தின் மன்ஹிசலந்தா கிராமத்தில் பிரம்மாபூர் மற்றும் ஷங்கர்பூர் ஆகிய இரு அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் 22 வயதான லக்கி ராத் என்ற இளைஞர் நடுவராக இருந்துள்ளார்.

அப்பொழுது, நடந்து கொண்டிருந்த போட்டியின் இடையில் சரியான பந்துக்கு நோ பால் கொடுத்துள்ளார். இதையடுத்து இரு அணி வீரர்களும் லக்கியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றிப்போய், ஃபீல்டிங் அணியினர் லக்கியை கூர்மையான கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட லக்கியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதற்கிடையில், கொலை செய்த நபர் களத்தில் இருந்தவர்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவம் கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்