மும்பை மைதானத்தில் ‘உலககோப்பை நாயகன்’ தோனிக்கு சிலை.! எப்போது திறப்பு தெரியுமா.?
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கு எம்.எஸ்.தோனியின் சின்னமான சிக்ஸர் இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஸ்ரீலங்கா அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் தோனி 79 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஒரு சிக்சருடன் இந்திய அணியை வெற்றிபெற செய்தார்.
இந்த போட்டியில் அவர் தான் ஆட்டநாயகன் கூட, தோனி விளையாடிய அந்த அதிரடியான இன்னிங்ஸ், நாட்டில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் நினைவில் நிலைத்து நிற்கிறது. குறிப்பாக அவர் கடைசியாக சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தது இன்னும் வரை யாராலும் மறக்கமுடியாது.
இந்நிலையில். 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், தோனி அடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Winning Shot’ சிக்சரை நினைவுகூறும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் தோனிக்கு சிலை அமைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளதாம்.
இந்த சிலையை தோனி கையாலேயே திறக்க அவரிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும், வரும் சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டியின் போது இந்த நினைவுச்சின்னத்தை இந்ததிறந்து வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.