ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம் – அன்புமணி ராமதாஸ்
புதிய சுரங்கங்களை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் உறுதியளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பேட்டி.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது, முதலமைச்சர் இதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை” சட்டப்பேரவையில் என்எல்சி நிறுவனத்தின் 6 சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில், நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய அரசு எப்படி ஏலம் விடும்? ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம்.
மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? மாநில அரசிடம் இது தொடர்பாக கேட்டால், எங்களுக்கு தெரியாது என கூறுகின்றனர். மத்திய அரசுடன் மாநில அரசு கைகோர்த்து செயல்படுகிறது. புதிய சுரங்கங்களை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.