பாதுகாப்பு அபாயம்…! TikTok-ஐ முடக்கியது ஆஸ்திரேலியா…
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவிலும் டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ளது.
சீனாவை தலைமையிடமாக கொண்ட டிக்டாக் நிறுவனமானது, தனது செயலி மூலம் தகவல்களை எடுத்துக்கொள்ளும் அபாயம் உள்ளதாக கருதி, ஆஸ்திரேலியாவில் டிக்டாக் செயலியை ஊழியர்கள், மொபைல் சாதனங்களில் பயன்படுத்த அந்நாட்டு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், டிக் டாக் செயலியால் ஏற்படும் சாதக, பாதங்கள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தற்போது தடை செய்வதாக கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த 2020-ல் டிக் டாக் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதே போல, ஏற்கனவே இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய பாராளுமன்றம், நார்வே உள்ளிட்ட சில நாடுகளிலும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மின்னனு சாதனங்களில் டிக்டாக் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.