உதவி கலெக்டரை கடித்து குதறிய தெருநாய்கள் ..! அதிர்ச்சியில் மக்கள்..!
தெலுங்கானா மாநிலத்தில் உதவி கலெக்டரை தெருநாய்கள் கடித்து குதறிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெருநாய்களின் தொல்லை பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்தில் சித்திபேட்டை நகரின் உதவி கலெக்டர் ஒருவரை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளது. சித்திபேட்டை நகரின் உதவி கலெக்டர் சீனிவாச ரெட்டி தனது காரில் இருந்து இறங்கி அலுவலக வளாகத்தில் நடந்து சென்றுள்ளார்.
அப்பொழுது, அங்கிருந்த தெரு நாய்கள் சீனிவாச ரெட்டியை துரத்தி அவரது காலில் கடித்துள்ளன. இதனால் அவருக்கு பலத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. பிறகு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சித்திபேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து, இரண்டு மணி நேரம் சீனிவாச ரெட்டியை கண்காணிப்பில் வைத்திருந்த பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.