IPL 2023: CSK vs LSG போட்டி; சென்னை அணி அதிரடி பேட்டிங்; லக்னோ அணிக்கு 218 ரன்கள் இலக்கு.!
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் CSK-LSG இடையேயான போட்டியில் சென்னை அணி 217 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்கமே அதிரடி காட்டத்தொடங்கியது. அதிரடியாக விளையாடிய ருதுராஜ்(57 ரன்கள்) மற்றும் கான்வே(47 ரன்கள்) அரைசதம் அடித்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய துபே தன் பங்கிற்கு 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
Devon Conway is dealing in sixes here at the moment ????????
The century stand is up for the @ChennaiIPL openers and they are eyeing a mammoth first-innings total ????
Follow the match ▶️ https://t.co/buNrPs0BHn#TATAIPL | #CSKvLSG pic.twitter.com/tqCaIxPrwI
— IndianPremierLeague (@IPL) April 3, 2023
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ்(8 ரன்கள்) இந்தமுறையும் ஏமாற்றமளித்து வெளியேறினார். கடைசியில் அம்பட்டி ராயுடு அதிரடியாக விளையாடி (27* ரன்கள்) அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசிக்கட்டத்தில் தோனி களமிறங்கி அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
A treat for the Chennai crowd! ????@msdhoni is BACK in Chennai & how ????#TATAIPL | #CSKvLSG
WATCH his incredible two sixes ???? pic.twitter.com/YFkOGqsFVT
— IndianPremierLeague (@IPL) April 3, 2023
முடிவில் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்துள்ளது. லக்னோ அணி சார்பில் மார்க் வுட் 3 விக்கெட்களும், பிஷ்ணோய் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.