பிரதமர் மோடி தமிழகம் வருகை..! டிஜிபி ஆலோசனை..
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகை.
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதையொட்டி, பாதுகாப்புகளை மேம்படுத்துவது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சென்னை கமிஷனர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி கர்நாடகாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு 2023ம் ஆண்டின் நான்கு மாதங்களில் இது மோடியின் 8-வது கர்நாடக பயணம் என்பது குறிப்பிடதக்கது.