ஏப்ரல் 30 தமிழ்நாடு தயாரிப்பாளர் தேர்தல்… மே 1ல் ரிசல்ட்!
தேர்தலை நியாயமாக நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் தேர்தல் அன்றே வாக்கு எண்ணிக்கை நடத்தவும் கோரி வழக்கு.
தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் ஏப்ரல் 30ம் தேதி நடக்க உள்ளதாக சென்னை வயர்நீதிமன்றத்தில் கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30ல் பதிவாகும் வாக்குகள் மே 1-ஆம் தேதி எண்ணப்படும் எனவும் தயாரிப்பாளர் கவுன்சில் தகவல் கூறியுள்ளது. தேர்தலை நியாயமாக நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் தேர்தல் அன்றே வாக்கு எண்ணிக்கை நடத்தவும் கோரி வழக்கு தொடுத்துள்ளனர். ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த கமல் குமார், சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளனர்.