சமூக நீதிக்கான முதல் தேசிய மாநாடு தொடங்கியது!
சமூக நீதிக்கான அகில இந்தியா கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லியில் தொடங்கியது.
சமூக நீதிக்கான அகில இந்தியா கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்களில் பங்கேற்றுள்ளனர். டெல்லி மகாராஷ்டிரா பவனில் நடக்கும் விழாவில் எம்பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார், கிரிராஜன், வைகோ, கீ.வீரமணி உள்ளிட்டோரும், பல்வேறு மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் காணொளி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.
மேலும், காணொளி வாயிலாக பல்வேறு மாநில முதலமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின், முதல் தேசிய மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்று உரையாற்றுகிறார். சமூக நீதியை தேசிய அளவில் முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.