டிஸ்மிஸ் நடவடிக்கை: எழுத்துப்பூர்வமாக அறிக்கை தரும் வரை போராட்டம் தொடரும் – கலாஷேத்ரா மாணவிகள் அறிவிப்பு.!
கலாஷேத்ரா பேராசிரியர்கள் 4 பேரை டிஸ்மிஸ் செய்ததை எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்தால் மட்டுமே கல்லூரிக்கு திரும்புவோம் மாணவிகள் உறுதி.
சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் 4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி, கடந்த மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தொடர் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக, 4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் பெயரில் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறது.
டிஸ்மிஸ் நடவடிக்கை:
இது தொடர்பாக, இன்று குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் வாய்மொழியாக தெரிவித்துள்ளனர். இது போக, மாணவர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் எனவும் நிர்வாகம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
போராட்டம் தொடரும் – கலாஷேத்ரா மாணவிகள்
தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக மாணவிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. அப்போது, கலாஷேத்ரா பேராசிரியர்கள் 4 பேரை டிஸ்மிஸ் செய்ததை வாய்மொழியாக தெரிவித்ததை விட, எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்தால் மட்டுமே கல்லூரிக்கு திரும்புவோம், இல்லையென்றால் போராட்டம் தொடரும் என கலாஷேத்ரா மாணவிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்னர்.