ஒன்றரை ஆண்டுக்கு பிறகு காரைக்காலில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு!
காரைக்காலில் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழப்பு.
காரைக்காலில் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைக்காலை சேர்ந்த 35 வயது பெண் கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 4 நாட்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்காலில் கொரோனாவால் பெண் உயிரிழந்தது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறையிடம் அறிவிக்கை தர கூறியுள்ளேன் என அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பெண்ணுக்கு என்னென்ன இணை நோய்கள் இருந்தது என விளக்கம் கேட்டுள்ளார். சுகாதாரத்துறையின் அறிக்கை அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் எனவும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.