ராகுல் ஏப்ரல் 13இல் நேரில் ஆஜராக தேவையில்லை- சூரத் நீதிமன்றம்.!
அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி, ஏப்ரல் 13இல் நேரில் ஆஜராகத் தேவையில்லை என சூரத் நீதிமன்றம் உத்தரவு.
2019இல் குஜராத்தில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனைஎதிர்த்து சூரத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் மேல்முறையீடு மனு மீதான விசாரணையின்போது, தண்டனை விதிக்கப்பட்ட, ராகுல் காந்தியின் ஜாமீனை ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது சூரத் செஷன்ஸ் நீதிமன்றம். சூரத் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட் 30 நாள் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், அதை நீட்டித்தது சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
இதன்பின் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம். மேலும் இவ்வழக்கு முடியும் வரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிலுவையில் வைக்கப்படுகிறது, இதனால் அவர் சிறை செல்லத்தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தண்டனை ரத்து செய்யப்படும்வரை ராகுல் மீண்டும் எம்.பி பதவியை வகிக்கமுடியாது.
மேலும், ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தொடர்பாக குஜராத் அரசு, மனுதாரர் புர்னேஷ் மோடி பதிலளிக்க ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க சூரத் மாவட்ட நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ராகுல் காந்திக்கு இடைக்கால ஜாமின் வழங்கவில்லை , வழக்கமான ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 13இல் அவர் நேரில் ஆஜராக தேவையில்லை என சூரத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.