IPL 2023: அதிரடி காட்டிய ராஜஸ்தான் அணி; ஹைதராபாத் அணிக்கு 204 ரன்கள் இலக்கு.!
ஐபிஎல் 2023 தொடரின் 4-வது போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக, ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 203/5 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. தொடக்க வீரர்களான ஜாஸ் பட்லர்(54 ரன்கள்), மற்றும் ஜெய்ஸ்வால்(54 ரன்கள்) இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு இறங்கிய சாம்சன் தன் பங்கிற்கு அதிரடி காட்டத்தொடங்கினார்.
அதன்பின் களமிறங்கிய படிக்கல் 2 ரன்களில், உம்ரான் மாலிக் வேகத்தில் போல்டானார். தொடர்ந்து விளையாடிய சாம்சன் (55 ரன்கள்) அரைசதமடித்துஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்துள்ளது. ஹைதராபாத் அணி சார்பில் ஃபரூக்கி 2 விக்கெட்களும், நடராஜன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.