ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிருக்கும் ஆளுநரே பொறுப்பு – செல்வப்பெருந்தகை
ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிருக்கும், ஆளுநர் ரவி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை அறிக்கை.
தூத்துக்குடியில் இன்று ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தம்பியை அண்ணன் இரும்பு கம்பி மூலம் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் சட்டபேரவை குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் அவர்களே, உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு உயிர் கொலையில் பறிபோயுள்ளது. தமிழ்நாடு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாத ஆளுனருக்கு இன்னும் எத்துனை உயிர்கள் ஆன்லைன் ரம்மியால் பறிப்போனபின் கருணை உள்ளம் பிறக்கும்?
அரசியல் சட்டத்தையும், தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசையும், மாண்புமிக்க சட்டமன்றதையும் மதிக்காத ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையா? உடனடியாக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், இல்லையென்றால் ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும். “ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர் அவர்கள்தான் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சட்டத்தையும், தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசையும், மாண்புமிக்க சட்டமன்றதையும் மதிக்காத ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையா? உடனடியாக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், இல்லையென்றால் ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும்.(1/2) pic.twitter.com/ToRgtWoSAH
— Selvaperunthagai K (@SPK_TNCC) April 2, 2023