அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது – எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு.!
சென்னையில் உள்ள பிஜேபி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுள்ளது. அதில், கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு அரசியல் பற்றியும், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேசியதோடு, திமுக அரசியல் பற்றி விமர்சனம் செய்தார். மேலும், அவர் பேசுகையில், மத்திய அரசு ரயில்வே துறைக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன கூறினார்.
அதிமுக – பாஜக கூட்டணி:
ஆளுநர் விவகாரத்தில் திமுக அரசு மிகப்பெரிய பொய்யை சொல்லி வருகிறது. மேலும், அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி வலுவாக உள்ளது என தெரிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையுமில்லை, கூட்டணி தொடர்கிறது எனவும், கூட்டணி குறித்து நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை:
தமிழகத்தில் 9 தொகுதிகளை அடையாளம் கண்டு பாரளுமன்ற தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக தென்சென்னையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தலைமை அறிவுரை செய்துள்ளது.