சேலம் அருகே தனியார் பள்ளி பங்குதாரர்களிடையே மோதல்!

Default Image

தனியார் பள்ளி பங்குதாரர்களிடையே  சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் கேட்டு பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

ஏழுமாத்தனூர் கிராமத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9 பங்குதாரர்களால் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அதன் பங்குதாரர்களிடையே நீண்ட நாட்களாக கணக்கு, வழக்கு பிரச்சனை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. பள்ளி வளாகத்திலேயே அவ்வப்போது பங்குதாரர்கள் மோதலில் ஈடுவதாகக் கூறும் மாணவர்களின் பெற்றோர், இதனால்  கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனையடுத்து தங்களது பிள்ளைகளின் மாற்றுச்சான்றிதழை வழங்குமாறு கேட்டு, பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த மகுடஞ்சாவடி காவல்துறையினர், பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்