அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்.! 21 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!
மத்திய, மேற்கு அமெரிக்காவில் உள்ள 8 மாகாணங்களை தாக்கிய புயலால் இதுவரை 21 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் என தகவல்.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை புயல் பேரழிவு ஏற்படுத்தியுள்ளது. ஆர்கன்சாஸில் பல வீடுகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் சேதமடைந்தன.
இந்த புயலால் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த புயலால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சல்லிவன் கவுண்டியில் மூன்று பேர் இறந்ததாக இந்தியானா பேரிடர் மேலாண்மை இயக்குனர் ஜிம் பார்ட்லி நேற்று தகவல் தெரிவித்தார்.
வடகிழக்கு ஆர்கன்சாஸின் வின் பகுதியிலும் பேரழிவு ஏற்பட்டது. இங்கு 2 பேர் உயிரிழந்தது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புயல் தாக்கிய வெள்ளிக்கிழமை அன்று இரவு, இல்லினாய்ஸ், பெல்விடேரில் உள்ள அப்பல்லோ திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 28 பேர் காயமடைந்தனாராம்.
மேலும், இந்த சம்பவத்தின் போது 260 பேர் அந்த இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்னும், இந்த புயலால் ஏற்பட்ட பொருட் சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த தகவல் அடுத்தடுத்த வெளியாகும் என்ற அச்சமான சூழ்நிலை தான் அங்கு நிலவுகிறது.