இ-சேவை மையத்தில் 100 புதிய சேவைகள்.. 13 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் மனோ தங்கராஜ்!

Default Image

அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு உள்ளிட்ட 13 புதிய அறிவிப்புகளை வெளிட்டார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

தமிழக சட்டப்பேரவை 10ஆவது நாளாக இன்று நடைபெற்றது. அதன்படி இன்று பிற்பகலில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு உள்ளிட்ட 13 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளிட்டார்.

பேரவையில் 13 புதிய அறிவிப்புகள்:

  • இ-சேவை மற்றும் மக்கள் சேவை மையத்தில் 100 புதிய சேவைகள் வழங்கப்படும். அதாவது, ரூ.1.20 கோடியில் கூடுதலாக 100 புதிய சேவைகள் இ-சேவை மற்றும் மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும்.
  • மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள 20,000 அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு ரூ.184 கோடியில் வழங்கப்படும்.
  • எல்காட் பூங்காக்கள் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களாக சர்வதேச தாரத்தில் மேம்படுத்தப்படும். சோழிங்கநல்லூர் எல்கோசெஸ்-ல் உலக தரம் வாய்ந்த பாசுமதி பூங்கா ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்.
  • மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்குக் குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை ரூ.100 கோடி செலவினத்தில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
  • தமிழ்நாடு இணைய வழி அரசு சேவைகளுக்கான ஒற்றை நுழைவு தளம் ரூ.11 கோடியில் அமைக்கப்படும். தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்கப்படும். தமிழ்நாடு நலத்திட்டப் பயனாளிகளுக்கான நேரடிப் பயன் பரிமாற்றத் தளம் ரூ.1.72 கோடியில் உருவாக்கப்படும்.
  • அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை உருவாக்கப்படும். தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் 2ம் கட்ட மற்றும் 3வது கட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். தகவல் தொழில்நுட்ப துறைகளுக்கான சீர்மிகு மையம் 10 கோடி ரூபாயில் நிறுவப்படும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்