நமது அம்மா நாளிதழிலின் ஆசிரியர் மருது அழகுராஜு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர்!
நமது அம்மா நாளிதழிலின் ஆசிரியர் மருது அழகுராஜும், நடிகர் சோ வின் மகன் ஸ்ரீராமும் ஜெயலலிதா மரணம் தொர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஏற்கனவே நமது எம்ஜிஆர் நாளிதழில் பணியாற்றிய போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகள் மற்றும் அரசியல் ரீதியாக பல தகவல்கள் மருது அழகுராஜூக்குத் தெரியும் என்ற அடிப்படையில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராகவும், நம்பிக்கைக்குரிய நபராகவும் நடிகர் சோ இருந்ததால், அவர் மறைவை அடுத்து அவரது மகன் ஸ்ரீராம் ஆஜராகியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.