IPL2023LIVE: 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி..!

Default Image

குஜராத் அணி வெற்றி:

முதலில் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 178 ரன்களை எடுத்தது தொடக்க வீரரான ருதுராஜ் கைக்கவாட் (92 ரன்கள்)அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.வெறும் 23 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். குஜராத் அணி தரப்பில் ஷமி, ரஷீத் கான் ,அலசரி ஜோசப் 2  விக்கெட்டுகளை எடுத்தனர்.

Image

இரண்டாவதாக களம் இறங்கிய குஜராத் அணி கடைசி ஓவரில் 182 ரன்கள்  எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 63 ரன்கள் எடுத்தார்.சென்னை அணி தரப்பில் அறிமுக வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் அருமையாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் குஜராத் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில்  அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது ஆட்டநாயகனாக சுப்மன் கில் தேர்வுசெய்யப்பட்டார்.

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஸ்ட்ரைக்ஸ் அகைன் :

Image

அறிமுக வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் குஜராத்தின் இம்பாக்ட் வீரர் சாய் சுதர்ஷன் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். 11 ஓவர் முடிவில் குஜராத் அணி 100 ரன்களை கடந்துள்ளது. தற்போது குஜராத் தொடக்க வீரர் கில் 50 ரன்களை அடித்துள்ளார்.

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஸ்ட்ரைக்ஸ்:

Image

தொடக்க வீரர் வ்ரிதிமான் சஹா வின் விக்கெட்டை அறிமுக வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் எடுத்துள்ளார். குஜராத் அணி 5 ஓவர் முடிவில் 55 ரன்களுக்கு  ஒரு விக்கெட் இழந்துள்ளது.

சென்னை 178:

முதலில் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 178 ரன்களை எடுத்தது தொடக்க வீரரான ருதுராஜ் கைக்கவாட் (92 ரன்கள்) அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.வெறும் 23 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். மேலும் கேப்டன் எம்.எஸ். தோனி அதிரையாக ஆடினார்.குஜராத் அணி தரப்பில் ஷமி, ரஷீத் கான் ,அலசரி ஜோசப் 2  விக்கெட்டுகளை எடுத்தனர்.

Image

இதனால் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.

ருதுராஜ் 92:

அதிரடியாக ஆடி வந்த ருதுராஜ் கைக்கவாட் 92(50)  ரன்களில் அவரது சதத்தினை தவறவிட்டார். சென்னை அணி 18 ஓவர்களில் 153 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா தற்போது அவுட் ஆன நிலையில் கேப்டன் மகேந்திர சிங் தோனி களமிறங்கியுள்ளார்.

கேன் வில்லியம்சன் காயம்:

Cut it off': Kane Williamson frustrated with nagging elbow injury | Cricket News - Times of India

13 ஓவரின் மூன்றாம் பந்தில் ஜோசுவா லிட்டில் வீசிய பந்தை ராயுடு பௌண்டரிக்கு தூக்கி அடித்தார். அதனை தடுக்க வந்த குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சன் பந்தை தாவி பிடித்தி கீலே விழுந்து காயமடைந்தார்.

10 ஓவர்களில் 100*:

சென்னை அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய ருதுராஜ் 30 பந்தில் 63* ரன்களும் அம்பத்தி ராயுடு 5* ரன்களுடன் உள்ளனர்.

ருதுராஜ் கைக்கவாட் 50*:

அதிரடியாக ஆடிவரும் ருதுராஜ் 23 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். சென்னை அணி 9 ஓவர் முடிவில் 90 ரன்களை எட்டியுள்ளது.

சென்னை 50*

IPL 2022: Ruturaj Gaikwad closes in on Sachin Tendulkar's IPL record as MI take on CSK

5 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்துள்ளது தொடக்கவீறார் ருதுராஜ் கைக்கவாட் 24* மற்றும் பென் ஸ்டோக்ஸ் 2* ரன்னுடன் களத்திலுள்ளனர்.

16- வது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. முதலில் சென்னை அணி பேட்டிங் செய்யவுள்ளது.

ஐபிஎல் தொடரின் துவக்க விழா 7 மணிக்கு  நடந்து முடிந்தது. இந்த துவக்கவிழாவில் நடிகை ராஷ்மிகா, தமன்னா ஆகியோர் நடனமாடினார்கள். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்