சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்..! மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை சிறப்பு மலை ரயில் இயக்கம்..!
உதகை வழித்தடத்தில் சிறப்பு மலை ரயில் ஏப்ரல் 14 முதல் இயக்கப்பட உள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கூடுதலாக சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மலைகளின் அழகை காண்பதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் முதல் உதகை வழித்தடத்தில் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு மலை ரயில் ஏப்ரல் 14ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், உலக புகழ்பெற்ற 125-வது மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் மே மாதம் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.