தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான்.. இதனால் புதிய கல்விக் கொள்கை வேண்டாம் – அமைச்சர் பொன்முடி
மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்கி வருகிறோம் என்று பேரவையில் அமைச்சர் பொன்முடி உரை.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை என்றால் தமிழ், ஆங்கிலம் மட்டும் தான். சர்வதேச மொழி ஆங்கிலம் இருக்கும்போது நமக்கு இந்தி தேவையில்லை. இந்தி திணிப்பு இருப்பதால் புதிய கல்விக் கொள்கை வேண்டாம்.
அதனால் தான் புதிய கல்வி கொள்கை வேண்டாம் என்று மாநில கல்வி கொள்கையை உருவாக்கி வருகிறோம். மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்கி வருகிறோம். 7.5% இட ஒதுக்கீட்டால் 2021-ல் 7,886 பேரும் இவ்வாண்டு 8,771 மாணவர்களும் பயன்பெற்றுள்ளனர். வரும் கல்வியாண்டில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தொழில் பாடங்கள் விரிவாக்கப்படும் என கூறினார்.
68,891 மாணவர்கள் இவ்வாண்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 1.28 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த நிலையில் இவ்வாண்டு 1.48 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-ல் 4.38 லட்சம் பேர் சேர்ந்த நிலையில் இவ்வாண்டு 5.33 லட்சம் சேர்ந்துள்ளனர்.
மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் எரிப்பான் இயந்திரம் வழங்கப்படும். 7 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 31 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு 1Gb அளவிலான தொடர் இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்றும் நிதி நிலை பொறுத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.