விண்ணை தொட்டது சென்செக்ஸ்..! 1,010 புள்ளிகள் உயர்வு..!
இந்திய பங்குச்சந்தைகள் இரண்டாவது முறையாக 1,000 புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 58,273 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் காலை நிலவரப்படி 658 புள்ளிகள் அதிகரித்து 58,618 ஆக வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்பொழுது சென்செக்ஸ் 1,000 புள்ளிகளை தாண்டி வர்த்தகம் செய்யப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 1,010 புள்ளிகள் அல்லது 1.74% என உயர்ந்து 58,970 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 279.80 புள்ளிகள் அல்லது 1.64% உயர்ந்து 17,360 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 58,961 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,080 ஆகவும் நிறைவடைந்தது.
இதே போல, 2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரைக்கு பிறகு சென்செக்ஸ் 1,102 புள்ளிகள் என உயர்ந்து 60,652 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.