சேப்பாக்கம் மைதானத்தில் கூடுதல் விலைக்கு உணவுப்பொருள் விற்பனை; உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விலைக்கு உணவுப் பொருள் விற்பதாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் உணவுப்பொருள் MRP விலையை விட அதிகபட்ச விலைக்கு விற்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் தமிழக அரசும் இதற்கு 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளும் தொடங்க இருப்பதால், பொதுமக்களும் இதனால் பாதிப்படையக்கூடும் என்பதால் பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இலவச குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியும் அமைக்கப்படவில்லை இதனால் இந்த வசதிகளை ஏற்படுத்தி தருமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரித்த நீதிபதிகள், வழக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் அரசும் , 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.