புதுச்சேரி தனிமாநில அந்தஸ்து; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதல்வருக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் நிலவிவருகின்ற நிலையில் மாநில அந்தஸ்து தான் ஒரேதீர்வு என முடிவு செய்யப்பட்டு, தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து இன்றி, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
எம்.எல்.ஏக்கள் முன்மொழிந்த தீர்மானம் அரசு தீர்மானமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டு சட்டப்பேரவையில் ஒருமனதாக 14-வது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.