காவிரியை விட காலா முக்கியமானதும் அல்ல!கமல்ஹாசன் அதிரடி
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியுடன் கமல்ஹாசன் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் பின் கமல்ஹாசன் கூறியதாவது, குமாரசாமியுடனான சந்திப்பு கூட்டணிக்கானது அல்ல.மக்கள் நலனுக்கானது குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட சென்றேன்.மேலும் காலா விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சரிடம் பேசினீர்களா என்ற கேள்விக்கு அவர் , அதற்கு கமல்ஹாசன் கூறியதாவது, காலா குறித்து கர்நாடக முதலமைச்சரிடம் பேசுவது தேவையற்றது, பேசவும் இல்லை. காவிரியை விட சினிமா முக்கியமானதும் அல்ல என்று அதிரடியாகவும் தெரிவித்துள்ளார்
முன்னதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்திப்பதற்காக பெங்களூரு புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார்,அப்போது கூறுகையில் தூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதி என்றால், தானும் சமூக விரோதிதான் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கான தேவை குறித்து, குமாரசாமியிடம் பேச இருப்பதாகவும், காலா பட பிரச்சினையை வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார். தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக ரஜினி தெரிவித்தது அவரது சொந்த கருத்து என்று குறிப்பிட்ட கமல், போராட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.