ஒரே வருடத்தில் 4-வது பணிநீக்கம்..! 380 ஊழியர்களை தூக்கிய அன்அகாடமி..!

Default Image

அண்மைய காலமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதால், அவர்கள் லாபத்தை ஈட்டும் பொருட்டு தங்களது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர்.

அதில், ஒன்றான Soft Bank-ஆதரவு பெற்ற எட்டெக் நிறுவனமான அன்அகாடமி, தனது பணியாளர்களில் 12 % குறைக்க உள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் முன்ஜால் அனுப்பிய உள் குறிப்பை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, அன்அகாடமி வெளியிட்டுள்ள அறிவிப்பு நான்காவது சுற்று பணிநீக்கமாகும். ஆம்… கடந்த 12 மாதங்களில் இத்துடன் நான்காவது முறையாக பணி நீக்கம் செய்துள்ளது. தற்போதைய அறிவிப்பில், 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சுற்று பணிநீக்கம் காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலவரப்படி, 6,000க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்துஅன்அகாடமியின் ஊழியர்களின் என்னைகை 3,000க்கும் கீழ் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்